செவ்வாய், 1 டிசம்பர், 2009

விட்டுச் சென்றவனின் நிழல்


நினைவுகள்
அறையில் சுருங்கி
காய்ந்த டீக்கோப்பையின்
கருநிறத்தை மிஞ்சும்

இரவில்
ஆந்தையின் அலறலாய்
ஆதிச் சொற்கள்
கருகி சாம்பலாகும்

புத்தகங்களில்
பூச்சி மேய்ந்து
எச்சங்களை சிதறடிக்கும்

பலநாள்களாய் மாற்றப்படாத
படுக்கை விரிப்பிலிருந்து
கலவியின் தீய்ந்த வாசனை
குற்றவுணர்ச்சியைப் பெருக்கும்

சவலைப்பிள்ளைபோல்
மெல்ல ஊர்ந்து செல்லும் வெயிலாய்
குழந்தையின் குதூகலங்கள்
மௌனத்தில் உறையும்

தனிமையின் நிழல்படிந்த இந்நாள்களில்
அவன் எங்களை கைவிட்டுப் போயிருந்தான்
ஓநாயின் விழிகளை ஒத்த அவனது நிழலை
என் அறையைவிட்டு வெளியேறச் செய்தேன்
அமைதி.

9 கருத்துகள்:

adhiran சொன்னது…

may god bless!!!!!!!!!!!!!!

:-)))

chandra சொன்னது…

உங்கள் கமெண்ட்டின் அர்த்த புரியவில்லை ஆதிரன். பாவம் கடவுள்.

பெயரில்லா சொன்னது…

ungal kavithai purivilli ennaku !
velangum padiya ethavathu eluthunga thozhi !

Unknown சொன்னது…

தனிமையின் உணர்வை உங்கள் கவிதை முலம் சொன்னது அருமை.

chandra சொன்னது…

Amudha Thamizh
///இரவில்
ஆந்தையின் அலறலாய்
ஆதிச் சொற்கள்
கருகி சாம்பலாகும் ////// இந்த ஆதிச் சொற்களுக்குள் ஒரு வசீகரம் இருக்கிறது chandhra..maybe அதுவே பெண்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமாய் இருந்திருக்கலாம்..words too well placed..i loved this word "ஆதி சொற்கள்"..சரியான இடத்தில் உபயோகிக்கும் சரியான வார்த்தை கூட அழகுதான்...simple at the same time moving..நன்றி..
about an hour ago · Delete
Amudha Thamizh
Amudha Thamizh
/////நினைவுகள்
அறையில் சுருங்கி
காய்ந்த டீக்கோப்பையின்
கருநிறத்தை மிஞ்சும்/////
ரொம்ப பிடிச்சிருக்கு இந்த comparison...அழகான metaphor...

Unknown சொன்னது…

சந்திரா கவிதையை வாசிக்கையில் இனம் தெரியாத துயரொன்று மனதில் கவிகிறது. பிரியம் வைத்தவர்கள் எல்லாரும் ஓர் நாள் விட்டு விலகுபவர்களே...சிலர் விரைவில்....

SarSel சொன்னது…

Whenever im visiting ur blog !
Im feeling some what uncomfort !
I dont know why !

ஓநாயின் விழிகளை ஒத்த அவனது நிழலை
என் அறையைவிட்டு வெளியேறச் செய்தேன்


May be Your words are always carrying some harsh message that make us feel like that!!!!!!!!!

adhiran சொன்னது…

//Whenever I am visiting ur blog !Im feeling some what uncomfort !I dont know why ! ! //


SarSel என்பவரின் இவ்வார்த்தைகள்தான் என்னைப்பொருத்தவரையில் ஒரு படைப்பின் வெற்றி. அதை ஒரு படைப்பாளி ஒரு வாசகருக்கேனும் செயவிக்கமுடிந்தால் போதும் என்று தோன்றுகிறது.

moove on!

chandra சொன்னது…

நன்றி ஆதிரன் உங்கள் அன்புக்கும்,ஊக்கப்படுத்தலுக்கும்.