வெள்ளி, 11 டிசம்பர், 2009

ப்ரியமானவர்களின் தேவதை...


பெருநீலக் கரையில்
தனித்து அலைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும்
மண்கோர்த்த சிப்பிகளில் சேகரிப்படுகிறது
அதை திறக்கும் சிறுமி உலகின் தனிமையின் தேவதை ஆகிறாள்
சொற்களைப் பிரித்து பிரபஞ்சம் முழுக்க விசிறி எறிகிறாள்
அது உங்கள் ப்ரியமானவர்களையும் சென்றடையலாம்

5 கருத்துகள்:

சைத்ர பூமி சொன்னது…

என்னை வந்தடைந்த நேரம் நான் உங்களுக்கு பிரியமானவனாய் இருப்பேன் அக்கா,,,,

chandra சொன்னது…

சைத்ரபூமிக்கு- அதை உணர்கிறேன் தம்பி.ப்ரியங்கள் ப்ரியமானவர்களுக்கானது.

SarSel சொன்னது…

endravathu oru naal sendru adayum endra nampikkayil !

உமாஷக்தி சொன்னது…

தனிமையின் தேவதை அள்ளித் தெளித்த சொற்கள் சேருமிடம் அடைந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். மகிழ்ச்சிதானே சந்திரா?

கொற்றவை சொன்னது…

beautiful..