வியாழன், 24 டிசம்பர், 2009

துயர்கொண்ட பாடல்


இன்னும் மீட்டப்படாமல்
புல்லாங்குழலில் பதுங்கிய இசையாய்
என்னுள் நிரம்பியிருக்கும் அன்பே
கடைசியாக
கடல் கொண்ட தனிமையை பரிசளித்தாய்
கன்னங்களில் வழிந்தோடும் நீரைத் துடைக்கும் பொருட்டு
நீ என்னை ஆட்சிசெய்தாய்
வாசனைகளால் நிரம்பி வழிந்த சொற்கள்
மயக்கமூட்டுகின்றன
இரவும் பகலும் தீய்ந்து பொசுங்குகின்றன
காலம் வெளி மறந்து மங்குகின்றன நினைவுகள்
தடித்த முத்தங்களால்
புண்ணாகிப்போன உதடுகள்
கேலி செய்கின்றன
மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள்
வாழ்வின் தீராத் துயரங்கள்
அன்பின் நிழலுருவம்
கண்ணிமைகளில் தொக்கி நிற்கிறது
தூரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன
நடக்க மறுக்கும் கால்கள்
அமைதியை விரும்புகிறது இதயம்
எல்லாவற்றிர்க்கும் மேலே
நானே எழுதிய
துயர்கொண்ட நீண்ட பாடல் வரிகள் அயர்ச்சியூட்டுகின்றன.

6 கருத்துகள்:

thavudan@gmail.com சொன்னது…

kavthi serivana anupavathi tharukirathu. remba nallarukku-v.ramasamy

chandra சொன்னது…

நன்றி ராமசாமி

SarSel சொன்னது…

அமைதியை விரும்புகிறது இதயம்

feel lik its fr me ! thks a lot

இந்திராகிசரவணன் சொன்னது…

சிறுதுளைகள் தாளமிடும்,
அவன் மூச்சுக்காற்று
உங்கள் இசையோடு கலக்கும்...
துயரங்களை காட்சிப்படுத்துகின்றன வரிகள்...நன்றாக இருக்கிறது...

chandra சொன்னது…

நன்றி இந்திராகிசரவணன்.உங்கள் பின்னூட்டமே கவிதையாக இருக்கிறது.

JOSE சொன்னது…

...மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள்
வாழ்வின் தீராத் துயரங்கள்..
"IYALAMAYIN THYUAR KOOTUM VARIKAL"
..MARAITHU VAITHA DAIRYAI MEENDUM EDUTHU PADIKKUM ANUPAVAM UNGAL KAVITAIKALIL.. THOZI.