வியாழன், 7 ஜனவரி, 2010

எனது இரண்டு நூல்கள் வெளியீடு

சிறுகதைகள் மற்றும் கவிதை நூல்களை உயிர் எழுத்து பதிப்பகம்
வெளியிட்டுள்ளது. கவிதைகள் தொகுப்பை கவிஞர் நா. முத்துக்குமார் வெளியிட
கவிஞர் சமயவேல் மற்றும் நடிகர் ஜெய் பெற்றுக்கொண்டனர். சிறுகதை தொகுப்பை
எழுத்தாளர் ஷோபா சக்தி வெளியிட இயக்குனர் சசிக்குமார் பெற்றுக்கொண்டார்.

சிறுகதைகள் தொகுப்பு- 'காட்டின் பெருங்கனவு'

'மனித உறவுகளை விரும்பி நாடும் ஜீவன்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப்
பேசுகின்றன சந்திராவின் கதைகள்.நேரான சொல்லல் முறையைக் கொண்டுள்ள இக்கதைகள் பால் சார்பற்றுக் கிளைத்தெழுகின்றன. பெண் மனம் தனித்து அவதானிக்கக்கூடிய நுட்பமான விஷயங்களைப் பதியும் சந்திராவின் கதையுலகில் இயற்கை பிரிக்க முடியாத கூறாக விளங்குகிறது. ஒரு மலைக்கிராமம் தொடங்கி சூது நிரம்பிய பெருநகரம்வரை புவியியல் அடையாளங்களாகக் கொண்ட சந்திராவின் கதையுலகப் பரப்பு வசீகரமானது'-எழுத்தாளர் நஞ்சுண்டன்.

கவிதைகள்-நீங்கிச் செல்லும் பேரன்பு

'தனித்த பறவையொன்றின் கீதமாய் காற்றில் கலந்து சன்னமாய் மனதிற்குள் ஒலிக்கச் செய்கின்றன சந்திராவின் கவிதைகள். மீளாத் துயரொன்றின் மீதேறிய கண்ணீரின் வார்த்தைகள் அவை. துரோகமும் மரணமும் அன்பு முறிதலுமாய் வாழ்க்கை துன்பங்களை பரிசளிக்கையில் அதற்கு பதிலாய் மொழியின் வாயிலாக வெறுமையின் வரைபடங்களை கவிதைகளாக வெளிப்படுத்துகிறார் சந்திரா'-கவிஞர் உமாஷக்தி.

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10945

9 கருத்துகள்:

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழி !

விஜய் மகேந்திரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
விஜய் மகேந்திரன் சொன்னது…

விழா சிறப்பாக இருந்தது.புத்தக காட்சியில் மாட்டிகொண்டு தாமதமா வந்தேன்.உங்கள் புத்தகங்களை படித்து கொண்டுஇருக்கிறேன் .நன்றி சந்திரா.

chandra சொன்னது…

நன்றி ஷெரிப்.

chandra சொன்னது…

நன்றி விஜய் மகேந்திரன்.படித்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள்.

விஜய் மகேந்திரன் சொன்னது…

sure i will

நிலாரசிகன் சொன்னது…

சந்திரா,

உங்களது சிறுகதை தொகுப்பிற்கான என் கருத்துரை இங்கே:

http://www.nilaraseeganonline.com/2010/01/blog-post_13.html

chandra சொன்னது…

நன்றி நிலா.

" உழவன் " " Uzhavan " சொன்னது…

புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்