வெள்ளி, 27 நவம்பர், 2009

நீங்காத வனவிலங்கின் தனிமை


நீங்கள் செய்யும்
ஒவ்வொரு காரியத்திலும்
வளர்ப்பு பிராணியாக்கப்பட்ட
நான் உடனிருந்தேன்
வாலாட்ட மட்டுமே
பழக்கப்படுத்தப்பட்ட
என் குரல்வளை
நசுக்கப்பட்டிருந்தன
அது இயல்பென்றிருந்தேன்
உங்களுக்கு கோபம்
வரும்போதெல்லாம்
என்மேல்
சிறுநீர் கழித்தீர்கள்
போதையின் உச்சத்தில்
என் மேல் காரி உமிழ்ந்தீர்கள்
குருட்டு பிச்சைக்காரியைப்போல்
திசையற்று பார்த்து
துடைத்துக்கொண்டேன்
எல்லாம் அன்பின் மிகுதியால்
நிகழ்த்தப்படுகிறது
என்றே கட்டமைக்கப்பட்டிருந்தேன்
கடைசியாக
உங்களுக்கு நன்றி செலுத்திய
என் வாலை நறுக்க முற்பட்டபோது
எனக்கு கூர்பற்கள்
இருப்பதை மறந்துவிட்டிர்கள்

11 கருத்துகள்:

உமாஷக்தி சொன்னது…

தலைப்பே கவிதையாக இருக்கிறது சந்திரா...

உமாஷக்தி சொன்னது…

தலைப்பே கவிதையாக இருக்கிறது சந்திரா...

chandra சொன்னது…

அப்ப கவிதையைப் படிக்கவில்லையா தோழி(சும்மா விளையாட்டுக்காக சொன்னேன் படித்திருப்பீர்கள் என்று தெரியும்).

சைத்ர பூமி சொன்னது…

அக்கா இந்த கவிதையை ஒடுக்கபட்ட ஒருவன் அல்லது ஒருத்தி சார்பாக நான் பத்திரபடுத்துகிறேன் ஏனெனில் நான் ஒரு ஒடுக்கபட்டவன்,,,

அஜயன்பாலா சித்தார்த் சொன்னது…

நல்ல கவிதை ஆனால் முடிவில் கூர் பற்கள் மட்டும் பத்தாது அதைவிட கொடூரமான ஒன்று தேவைப்படுகிறது.அது போல ”என்னின் “என்று வராது.மற்றபடி மிகசிறந்த கவிதைகளை தொடர்ந்து எழுதிவருவதால் அடுத்த ஆண்டின் சிறந்த கவிதைதொகுப்பு உன்னுடையதாகத்தான் இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்

chandra சொன்னது…

தம்பி தெரிந்தும் தெரியாத வகையிலும் பெண் என்ற முறையில் நானும் தினமும் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லா ஒடுக்குமுறைகளும் அதிகாரத்தின் கீழ் கட்டமைக்கப்படுகிறது. இன்னும் நம்மை நாமே தாழ்வாக நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது.சாதி இந்துகள்,பார்பனிய ஒடுக்குமுறைகளை நாம் அதிகாரத்தை கைப்படுத்துவதன் மூலமே அடக்க முடியும். அதற்கான அடியை நீங்கள் எடுத்து வைத்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.

chandra சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி அஜயன் பாலா.'என்னின்' என்ற வார்த்தையில் இருக்கும் 'னின்' என்ற இரண்டு எழுத்துக்களை எடுத்துவிடுகிறேன். மற்றபடி கூர்பற்கள் இந்தக் கவிதைக்கு பொருத்தமாக இருப்பதாகவே நினைக்கிறேன் நண்பா. நன்றி உன் ஊக்கப்படுத்தல் எனக்கு இன்னும் எழுதுவதற்கான உந்துசக்தியை கொடுக்கிறது.

Sarsel சொன்னது…

$$$$$$$$$$$$$$$$$$

தம்பி தெரிந்தும் தெரியாத வகையிலும் பெண் என்ற முறையில் நானும் தினமும் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

$$$$$$$$$$$$

நீங்களாகவே ஒதுங்கிக்கொண்டு ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறேன்
என்று சொல்லாதிர்கள்.
எங்கு இருக்கிறிர்கள் நீங்கள் தோழி !
காலம் நம்மை எங்கோ அழைத்து செல்கின்றது !
இன்னும் நீங்களே உங்களை தாழ்த்திகொள்ளதிர்கள் !

Sarsel சொன்னது…

$$$$$$$$$$$$$$$$$$

தம்பி தெரிந்தும் தெரியாத வகையிலும் பெண் என்ற முறையில் நானும் தினமும் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

$$$$$$$$$$$$

நீங்களாகவே ஒதுங்கிக்கொண்டு ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறேன்
என்று சொல்லாதிர்கள்.
எங்கு இருக்கிறிர்கள் நீங்கள் தோழி !
காலம் நம்மை எங்கோ அழைத்து செல்கின்றது !
இன்னும் நீங்களே உங்களை தாழ்த்திகொள்ளதிர்கள் !

chandra சொன்னது…

sarsel மனரீதியாக உடல்ரீதியாக பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி நீங்கள் அறிய வாய்ப்பில்லை என்று உங்கள் கருத்திலிருந்து தெரிகிறது. நீங்கள் பெண்களை நல்லவிமாக நடத்தலாம் அல்லது முயற்சிக்கலாம் அல்லது அப்படி நடத்துவதாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மை அப்படியில்லை நண்பரே இங்கு தலித்துகளும் பெண்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

Sarsel சொன்னது…

ungalin karruthil enaku udanpadu illai !

odukappatavargal enru solliya matravarkalai oram katta parpavarkal neengal !

Udukappatavargal enru solliye endru oyaramaga irukkirirgal !

unmayil odukappatavargal yaar enru entha ulagam ariyum !