ஞாயிறு, 15 நவம்பர், 2009

வாழ்வின் ருசி


வெகுநேரமாய்
தனிமையின் சோகை பிடித்த
ரயில் நிலையத்தில்
விசிலுடன் காத்திருந்தான்
கெண்டைக்காலுக்குமேல்
சேலை உயர்ந்து
கறுத்த கொலுசின்
ஒலியில்
நடந்து வருவது
தாமரைதான்
வயிறு புரண்டு வலித்தது
தோளில் படுத்திருந்த
குழந்தை
அவள் சாயலிலே இருந்தது
பால்ய சாயல்
காணாமல் போயிருந்த அவனைக்
கடந்து போனாள் காற்றைப்போல.
கையில் இரண்டு பைகளைச் சுமந்திருந்தாலும்
ஓடிப்போய்
அவள் கையிலிருந்த பையைவாங்கி
தன் கைக்குள் திணித்துக்கொண்டவன்
அவள் பின்னாலிருந்து
புன்னகை வழிய
குழந்தையைக் கொஞ்சியபடி போனான்
நல்லவிதமாய்த்தான் இருக்கிறது
வாழ்க்கை

11 கருத்துகள்:

தமயந்தி சொன்னது…

ஒரு அனுப‌வ‌த்தின் இருப்பும் இழ‌ப்பும் வரிக‌ளில் இழையோடுது ச‌ந்திரா வெள்ள‌த்தினூடே போகும் ஒற்றை மாலையாய்

chandra சொன்னது…

மனதை மாற்றும் முயற்சியில் வாழ்க்கை அனுபவத்தை வேறுவிதமாகத்தான் பார்க்க முயற்சியிக்கிறேன் தோழி.ஆனால் நீங்கள் சொல்வதைப்போல் வெள்ளத்தினூடே போகும் ஒற்றை மாலையாய் தனிமை சேர்ந்துவிடுகிறது.

chandra சொன்னது…

மனதை மாற்றும் முயற்சியில் வாழ்க்கை அனுபவத்தை வேறுவிதமாகத்தான் பார்க்க முயற்சியிக்கிறேன் தோழி.ஆனால் நீங்கள் சொல்வதைப்போல் வெள்ளத்தினூடே போகும் ஒற்றை மாலையாய் தனிமை சேர்ந்துவிடுகிறது.

chandra சொன்னது…

Amudha Thamizhஎன் face book ல் போட்ட கருத்து,

indha nimidamum kadandhu kondudhaan irukkiradhu...Sila..,pala...,samayangalil nammudaya pangalippuhal ,mattravarhalin PURA SUMAI halai thookka munaivadhoedu mattum mudivadaindhu viduhiradhu..vaazhkkayil ellaavattrayum AHATHil aettrip paarkka aasaidhaan.Aanaal oru sila kanneer sottukkaloedu manadhin valihalai vizha vaippadhoedu ellaam mudivadaindhu viduhiradhu..VAAZHKKAI OEDIK KONDAE IRUKKIRADHU chandra..OLIyayum IRULayum orae mudhuhil sumandhu kondu...

chandra சொன்னது…

அமுதா உங்களின் எல்லாப் பதில்களுமே கவிதையாக இருக்கிறது.எல்லாவற்றிலும் மிக அழகாக அக்கறையோடு கவனம் செலுத்துகிறீர்கள்.ஒரு துளி கண்ணீரையும் ஒரு துளி சந்தோசத்தையும் சேர்ந்தே கொடுக்கிறது உங்கள் எழுத்து.

Unknown சொன்னது…

நன்றாக இருக்கிறது இந்தக் கவிதை தோழி...ரயில் நிலையத்தில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பல சமயங்களில் நான் தனிமையை உணர்வேன்..சுற்றிலும் ஆட்கள் இருந்தாலும் நமக்கெல்லாம் தனிமை என்பது துணைதானே? எளிமையான வார்த்தைகள் உங்களுக்கு எப்படி வாய்த்தது சந்திரா, அருமையான கவிதை இது..

chandra சொன்னது…

என்னுடைய எழுத்தின் மாற்றங்களை, மனநிலையை அறிந்தவர் உமா நீங்கள். கடுமையான மனநிலையை மாற்றும் முயற்சிதான் இந்த எழுத்து என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே! சில உணர்வுகளை எளிமையாக மட்டுமே சொல்வதுதான் நியாயம்.உண்மையில் இந்த எழுத்தை எழுதிமுடித்தபின் ஒரு நிம்மதி, நம்பிக்கை வந்தது என்பது உண்மை.

மாரி செல்வராஜ். சொன்னது…

இதே போல் ஒரு ரயில் நிலையத்தில் தான் அவளை தொலைத்தேன்.அவள் போன ரயில் திரும்பி வந்துவிட்டது ஆனால் அவள் மட்டும் இன்னும் திரும்பவில்லை,அவளுக்காக காத்திருக்கும் எனக்கு உங்களின் இந்த கவிதை நல்ல துணைதான் அக்கா,,,

chandra சொன்னது…

உண்மை தம்பி ரயில் நிலையம் எப்போதும் யாரையாவது வரவேற்றுக்கொண்டும் தொலைத்துக்கொண்டும் இருக்கிறது.உங்களுக்கான பெண் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் உங்களுக்காக மட்டுமே காத்துக்கொண்டிருப்பாள்.

raja சொன்னது…

பயணம் ஒருவரை மற்றவரிடமிருந்து பிரித்து வேறொருவரிடம் கொன்டு சேர்க்கிறது.தனிமையை நம்மை அனைத்துக்கொள்ளும் போதெல்லாம் புதிதாய் ஒன்றை தேட ஆரம்பிக்கிறது மனது.உங்களின் அந்த தேடலில் கிடைத்த கவிதைதான் இதுவென நினைக்கிறேன் தோழி..

chandra சொன்னது…

அப்படியாகவும் இருக்கலாம் ராஜா.