வெள்ளி, 18 டிசம்பர், 2009
பிரபஞ்சத்தை நிறைக்கும் உடல்
என் கருந்தசைகளை
தின்ன ஆசைப்பட்டபோது
உன் காதலைச் சொன்னாய்
மாமிச பட்சியின்
ஒளிர்ந்த கண்கள்
கிளர்ச்சியூட்டியது
இதயத்தில் அல்லாது
மூளையில் உன்னை அமர்த்திக்கொண்டேன்
குற்றவுணர்வில்லையே என்றபடி
லிங்கத்தை கூர்மையாக்கி
என் துயரினில் செருகினாய்
அதிர்ந்தது உடல்
கீற்றைப்போல் கூட
அன்பு ஒளிந்திருக்கவில்லை அதில்
துக்கத்தை முழுமையாக்கினாய்
என் உடலை காகங்களுக்கு
தின்னக் கொடுத்தேன்
மாமிச வாடை
பிரபஞ்சத்தை நிறைக்கிறது.
2
மென் சொற்களில் துவங்கியது
வன் சொற்களில் முடிகிறது .
விலங்குகளின் உருமல்களோடு
தவித்தலைந்து வன்மம் கொண்டிருக்கிறது
பாவிகளின் ஆன்மா .
வெளிகளில் மிதக்கும் என் புன்னகையில்
ஒளிந்திருக்கிறது
அவர்களுக்கான நேசம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
கடுமை நிறைந்த கவிதை. தன்னைத்தானே வதைத்துக்கொள்வது ஒருவகை பழிதீர்ப்பு. கவிதை இந்த வேலையை செய்யும் போது எல்லோருக்கும் வலி. உங்கள் கவிதைகள் தன்னைத்தானே வதைத்துக்கொள்கிறதாக படுகிறது எனக்கு. நன்றி.
nice
என் போன்ற இளையோருக்கு காமத்தை பற்றிய நடுக்கத்தை ஏற்படுத்துகிறது இந்த கவிதை அக்கா,,
கருத்துரையிடுக