திங்கள், 14 டிசம்பர், 2009

பெருமழைக் காலம்


நகரம் பெருமழையாய் காட்சியளித்தது
அவனுக்காக
மரமல்லிப்பூக்கள் உதிரும் சாலையில்
வெகுநேரம் காத்திருந்தாள்
அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர்
நகரை மூழ்கடித்தது
எப்படியும் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில்
தன்னை அடைவான் என்றிருந்தாள்
தன் சுவடுகளை அருவமற்று அழித்து
அவன் பாலையில் குடியேறியதாகச் சொன்னான்
மழைக்கோட்டணிந்த வழிப்போக்கன் ஒருவன்.

7 கருத்துகள்:

விஜய் மகேந்திரன் சொன்னது…

nanraga ullathu kavithai

Unknown சொன்னது…

அழகான கவிதை சந்திரா...

adhiran சொன்னது…

ஆற்றில் நீளும் நாணல்கள் வேரை விடுவதில்லை. பாலைக்குள் புகும் மழை. மழைக்குள் புகாது பாலை!
................................
எப்படி என்னோட இந்த கடி?!
................................

chandra சொன்னது…

நல்லா இருக்கு ஆதிரன்.'ஆற்றில் நீளும் நாணல்கள் வேரை விடுவதில்லை. பாலைக்குள் புகும் மழை. மழைக்குள் புகாது பாலை'- கடி அல்ல கவிதை.

மாரி செல்வராஜ். சொன்னது…

நல்ல குளிரில் மேல் சட்டை அணியாமல் படித்தேன் ரசித்தேன் அருமை அக்கா,,

chandra சொன்னது…

நன்றி தம்பி

கொற்றவை சொன்னது…

very nice