செவ்வாய், 8 டிசம்பர், 2009

திரும்பி வராதவனின்.....

உன்னை நான் அடையாளம் காணாத
அந்த முதல் தருணத்தில்
கடும் தேனீர் சாப்பிட்டபடி
ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்த
என்னை யாரென்று கவனித்து கேட்டேன்
என்றாய் பின்னாளில்.
அங்கேயே பெரும்நகரம் நடுங்க
அன்பின் கருத்தை உன் வார்த்தையால் கொடுங்கத்தியாக்கி
கூட்டத்தில் செருகினாய்
என் வன்மம் தூண்டி
அன்று நான் புறக்கணிக்கும் எதிரியானாய்
மற்றொரு சந்திப்பில்
உன்னைக் கடந்து சென்ற போதும்
பாவங்களின் பாவி என்றே கருக்கொண்டேன்
பிரிதொருநாளில்
என் நண்பர்களுடன் நீ நிற்கையில்
எதிர்பாராமல் உன்னிடம் பேச வாய்த்தபோது
நீ சிறந்த கவிஞன் என்றேன்
சொல்லிவிட்டு என் வாகனத்தை திருப்பினால்
மரணம் மிக அருகில் நின்றது
உயிர் எழுப்பும் ஒசையைப்போல
பார்த்து போங்க உன் தாய்மையின் குரல்
அன்பின் பெருத்த விழிகளால் நான் திரும்பிப் பார்த்தேன்
இனி எல்லாம் நிகழும் என்பதை
உன் நண்பனும் என் தோழியும் அறிந்தே வைத்திருந்தார்கள்
நாம் இப்போது இல்லாமல் இருப்பதையும்.

7 கருத்துகள்:

SarSel சொன்னது…

hmmmmmmmmm oru chinna maatram !

thirumbi varaadhavalin !!!!!!!!!!

Unknown சொன்னது…

உயிரோட்டமான கவிதை சந்திரா. நம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்கள் திரும்ப வராதவர்கள் தான். நம்மைப் பற்றிய அவர்கள் நினைவிடைஞ்சல்களும் அவர்களைப் பற்றிய நம் மனதின் இடுக்குகளில் சிக்கியிருக்கும் மிச்ச நினைவுகளும் வாழ்நாள் முழுவதும் சிலுவையாய் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கிறது. அன்பற்றவர்களின் இதயத்தை அப்படி செய்ய வேண்டாம் என்றே தோன்றுகிறது. அழகான கவிதை இது.

chandra சொன்னது…

Amudha Thamizh
////அன்பின் பெருத்த விழிகளால் நான் திரும்பிப் பார்த்தேன்////
கவிதை தரும் வலிகளை வார்த்தைகள் தம் அர்த்தங்களால் ஒத்தி எடுக்கிறது...certain choice of words used here to EMOTE are beyond my level of commenting on it..

Dhana சொன்னது…

அருமை...

கொற்றவை சொன்னது…

miga miga arumai