ஞாயிறு, 8 நவம்பர், 2009

என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகள்



என் உள்ளங்கையில் பரந்து விரிந்து
நாடி நரம்பெங்கும் கிளைபிரிந்து
குருதி வெள்ளமாக
பாய்கிறது
உன் அன்பின் நெடிய வாசனை
கொதி அமிலமாய்
அன்பை என் முகத்தில் பீய்ச்சியடிக்கிறாய்
நாறி சீழ்வடியும் நீரை
என் வலியோடு சேர்த்துக் குடிக்கிறாய்
உலகின் உன்மத்தம் இதுவென்று
நாட்டியமாடுகிறாய்
ஆனால்
ஈரம் கசியும் என் புண்களில்
உன்னால் ஒருநாளும்
கனிந்த முத்தத்தைக் கொடுக்க முடியாது
லட்சம் சிறகுகள் கொண்ட உடலை குறுக்கி
என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகளை
பொதிந்து வைத்திருக்கிறேன்
அதிகாரத்தின் அன்பை
அவை
ஏளனத்தோடு பார்த்துச் சிரிக்கும்
அவ்வளவே
அதன்முன் மண்டியிட்டு உன்னால்
தோற்றுப்போகவே முடியும்.

10 கருத்துகள்:

PaulGregory.... சொன்னது…

அக்கா உங்கள் ம்ருதுவான இதயம் குருதியின்றி நரம்புகளை வெற்றிடமக்கியதொரு உனர்வை இந்த கவிதை வரிகளில் நிரப்பி என்னை என் சிரியதொரு கொலை செய்ய தூண்டுகிறாய்....

chandra சொன்னது…

நீ கொலை செய்ய ஆசிர்வதிக்கிறேன் தம்பி

தமயந்தி சொன்னது…

லட்சம் சிறகுகள் கொண்ட உடலை குறுக்கி
என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகளை
பொதிந்து வைத்திருக்கிறேன்....


ம‌ழைக்கான‌ கூட்டுக்குள் ஒலிக்கும் ஆன்மாவின் பாட‌ல்க‌ளில் வ‌ற‌ட்சி இருக்க‌ சாத்திய‌மில்லை. ர‌ண‌ங்க‌ளின் பிரிவில் ஒளிந்திருக்கும் அன்பின் ப‌கிருத‌லில் எடை குறையுது க‌ண்ணீர்...

adhiran சொன்னது…

muthalil en varuththankal.

kavithaiyin nithaanam ennai athiracheikirathu. koorami matrum nunnarivu aakiyavai intha kavithaiyil pothinthirukkum aayutham.

nanri chanra.

chandra சொன்னது…

உண்மையில் நிதானத்தில் எழுதவில்லை ஆதிரன்.என் மீது செலுத்தப்படும் வன்முறையும் அயோக்கியத்தனமும் நிலைகுலையச் செய்யும் பித்துநிலையில் இந்நாள்களில் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.உங்கள் அன்புக்கு நன்றி ஆதிரன்.

chandra சொன்னது…

தமயந்திக்கு...

மிகக் கடினமானதும் கணக்கற்ற எடையுள்ளதும் கண்ணீர் தோழி.கண்ணீரின் எடையைத் தாங்க முடியவில்லை அன்பே..

Unknown சொன்னது…

சந்திரா, மிகவும் காத்திரமான படைப்புகளை இத்துயரமான நாட்களில் நீங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. வாழ்க்கை இவ்விதம் தான் தோழி...படத்திற்கான கவிதையா அல்லது கவிதைக்கான படமா என்று தெரியவில்லை. இரண்டும் அற்புதம். சீக்கிரம் தொகுப்பை வெளியிடுங்கள்.

chandra சொன்னது…

உமாவிற்கு,இவ்விதமாக என்னை உற்சாகப்படுத்தி அன்பின் மிச்சத்தை கற்றுக் கொடுக்கிறாய்த் தோழி

மாரி செல்வராஜ். சொன்னது…

தாங்கள் ”பூனைகள் இல்லாத வீடு”சந்திராதாவா,,,,

chandra சொன்னது…

ஆமாம் நண்பரே