சனி, 24 அக்டோபர், 2009

நினைவுப் புழுக்கள்
உன் மௌனத்தின் லட்சம் புழுக்கள்
என் மூளையில் பாறையாய் இறுக்கி
ஞாபகத்தை அழிக்கிறது
பிரிதொரு கணத்தில்
புழுக்கள் இடையறாது ஊறி
அதில் பல லட்சம் நினைவுகள்
தொடர்பின்றி தோன்றி
மூளையை சிதறடித்து
கண் காது மூக்கு வழியே
வேகத்துடன் வெளியேறும் போது
நினைவில் உயிர் பிரிவதை உணரமுடிகிறது
ஆன்மாக்கள் பற்றி எரியும் நம் உறவில்
பகிர்ந்துகொள்வதற்கு
அழுகிய முத்தங்களே உள்ளன
என்பதை அறிவேன்
இருந்தும் பிரிவின் வலியை
பாதத்தின் நடுநரம்பு
சுண்டியிழுத்து உணர்த்துவதை
விரும்பவே செய்கிறேன்.

13 கருத்துகள்:

chandra சொன்னது…

http://www.facebook.com/ayyanarv

Ayyanar Viswanath
/பாதத்தின் நடுநரம்பு
சுண்டியிழுத்து உணர்த்துவதை / great fee

chandra சொன்னது…

Chandra Thangaraj
thanks for your comment ayyanar

நிலாரசிகன் சொன்னது…

இப்படி ஒரு சிறந்த கவிதையை படித்து பல காலமாகிறது.

வாழ்த்துகள் சந்திரா.
(உங்களது சிறுகதை உயிர் எழுத்தில் வாசித்தேன்.அதன் தாக்கம் குறைந்தபின்னரே அதைப்பற்றிய விமர்சனம் எழுதலாம் என்றிருக்கிறேன்,வாழ்த்துகள்)

நன்றி,
நிலாரசிகன்.

chandra சொன்னது…

உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நிலா ரசிகன்.

தேவன் மாயம் சொன்னது…

ஆன்மாக்கள் பற்றி எரியும் நம் உறவில்
பகிர்ந்துகொள்வதற்கு
அழுகிய முத்தங்களே உள்ளன
என்பதை அறிவேன்
இருந்தும் பிரிவின் வலியை
பாதத்தின் நடுநரம்பு
சுண்டியிழுத்து உணர்த்துவதை
விரும்பவே செய்கிறேன்.
//

உண்ர்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!

ரோஸ்விக் சொன்னது…

அனைத்தும் அருமையான வரிகள். நல்ல உணர்வுகளும், உணர்ச்சிகளும் பின்னிப் பிணைந்து இருப்பது புரிகிறது. வாழ்த்துக்கள்.


http://thisaikaati.blogspot.com

chandra சொன்னது…

நன்றி தேவன்மாயம், ரோஸ்விக்

உயிரோடை சொன்னது…

க‌விதை ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து ச‌ந்திரா. வாழ்த்துக‌ள்

chandra சொன்னது…

நன்றி உயிரோடை

தமயந்தி சொன்னது…

heyy chandra..

ஆன்மாக்கள் பற்றி எரியும் நம் உறவில்
பகிர்ந்துகொள்வதற்கு
அழுகிய முத்தங்களே உள்ளன
என்பதை அறிவேன்

kamaladas'in viichu therigirathu

chandra சொன்னது…

கமலாதாஸ் கவிதைகளை அவ்வளவாக படித்ததில்லை தமயந்தி. அவருடைய சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இருந்தாலும் அவர்களோடு ஒப்பிட்டதற்கு மிகவும் நன்றி.

thavudan@gmail.com சொன்னது…

unmaiyei enthakavithi unkal valakamana thelivum azakiyalum velipadamal sutri valaithiruppathaka unarkiren.vee.ramasamy

chandra சொன்னது…

எல்லாக் கவிதைகளிலும் அழகியல் வெளிப்பட வேண்டுமா ராசாமி