வியாழன், 1 அக்டோபர், 2009

குருதி முத்தம்


என்
வலிதரும் காயங்களிலிருந்து
பிறந்தவை உனக்கான அன்பு
காயங்களைக் குறுக்குவெட்டு
தோற்றத்தில் பிளந்து
உன்னை ஒரு அணுவும்
வெளியேறதவாறு இறுக்கி அணைக்கிறேன்
துவளும் மயிலிறகால் இனி நீ என் காயங்களைப் பிளந்தால்
மணக்கும் நிணத்துடன் நீதான் வடிவாய்
அன்பே.
எனக்காக கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தாலான பழக்குடுவையை ஏந்தி
சத்தமின்றி மென் புன்னகையுடன் ரசித்துப் பருகுகிறாய்
தவறி விழுந்து சிதறிய துளியை
புன்னகையால் இட்டு நிரப்பும் வித்தையை
உன் களவில் ஒளித்துவைக்கிறாய்.
என் கையில் இருப்பதோ
இதயத்திலிருந்து உருஞ்சி எடுக்கப்பட்ட
குருதி நிரம்பிய முத்தக் குடுவை
அதை உனக்கு ருசிக்கக் கொடுப்பதா
இல்லை
பிடிநழுவ விடுவதா
உன் பழரசமும்
என் குருதி முத்தமும் ஒன்றல்ல
அன்பே
இரண்டும் ஒரே உதட்டில் உறிஞ்சப்படுகிறது
அவ்வளவே.

10 கருத்துகள்:

Karthikeyan G சொன்னது…

//உன் பழரசமும்
என் குருதி முத்தமும் ஒன்றல்ல //

too good..

chandra சொன்னது…

நன்றி கார்த்திகேயன்

உமா ஷக்தி சொன்னது…

மிகத் தீவிரமான தளத்தில் இயங்கும் இக்கவிதையை வாசிக்கையில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றுகிறது சந்திரா. மிக அருமையான கவிதை, தோழி என்பதற்காக மிகைபடுத்திச் சொல்லவில்லை. எப்போதும் உன் கவிதையை விட உரைநடையை நான் மிகவும் ரசிப்பவள். ஆனால் இப்போதெல்லாம் நீயெழுதிக்கொண்டிருக்கும் கவிதைகள் ஆழமானவை...தொடர்ந்து எழுதுங்கள்..

chandra சொன்னது…

நன்றி தோழி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவற்கு

chandra சொன்னது…

நன்றி தோழி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவற்கு

Vetti pullai சொன்னது…

salutations for your thought

chandra சொன்னது…

நன்றி வெட்டி புள்ளை

ravikumar சொன்னது…

சந்திரா
அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவ மழை ஆரம்பித்திருக்கவேண்டும். ஆனால் இன்னும் காற்றில் வறட்சி குறையவில்லை. உங்கள் வலைப் பதிவு அந்தக் குறையை தீர்க்கிறது. நன்றி
ரவிக்குமார்

chandra சொன்னது…

மிக்க நன்றி ரவிக்குமார் சார்

Raja சொன்னது…

அழுத்தமான உணர்வுகளுடனான கவிதை...வாழ்த்துக்கள்...