வெள்ளி, 16 அக்டோபர், 2009

பெருத்த துரோகம்


அன்புடன் என்னை முத்தங்களால் ஆரத்தழுவி
நான் அருமையான துரோகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்
எப்போதும் போதையேற்றிக் கொண்டிருக்கும்
அவன் துரோகத்தின் மீது ஒரு குஷ்டரோகியின்
ஆழ்ந்த கனிவை ஆழப்பதிந்தேன்
எச்சிலை கவனமாய் துடைத்தவனின் கண்களைக் கவனித்தேன்.
நிழலைப் போல படர்ந்திருந்த துரோகத்தை
வழியும் உதிரமாகக் காட்சிபடுத்தினான்.
அவன் உண்மையின் குரூரத்தின் மீது
என் பொய்யின் அறுவெறுப்பு
பெரும் அச்சக் குரலாக மாறி
துரோகத்தை இறுக்கப் பற்றியது
உண்மையின் அன்பையும்
பொய்யின் வன்மத்தையும்
பெருத்த துரோகமாக்கி
ஒரு குடுவையில் ஏந்தி
இருவரும் பருகினோம்.

10 கருத்துகள்:

Vetti pullai சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Vetti pullai சொன்னது…

kutramum vanmayum soozhndhu nirpinum
sudar viduvaai thozhi...
en vazhthukkal...
Always remember what doesn't break you will make you...

chandra சொன்னது…

நன்றி தோழி. அவள் அப்படித்தான் மஞ்சுவைப் போல் உடைய உடைய வீட்டைக் கட்டிக் கொள்ளலாம் தோழி

நிலாரசிகன் சொன்னது…

மிகச்சிறப்பாக வந்திருக்கிறது கவிதை. வாழ்த்துகள் :)

chandra சொன்னது…

நன்றி நிலாரசிகன்

adhiran. சொன்னது…

oru personal feeling eppadi univarsal kavithai aahirathu enbatharkku anbin maranam oru arumaiyaana uthaaranam. nice.
- adhiran.

chandra சொன்னது…

நன்றி ஆதிரன்

marie mahendran சொன்னது…

ffffffffffffffffff

-மாரிமகேந்திரன்marie mahendran சொன்னது…

அருமையா காத்திரமான வாசல்

chandra சொன்னது…

நன்றி மகேந்திரன்