புதன், 14 அக்டோபர், 2009

அன்பின் மரணம்


அப்பாவின் சுருக்கமற்ற
முதுகுத் தசையின் அணுக்களில்
மரணம் தன் அன்பின் முத்தங்களை
மெதுவாக பாய்ச்சியிருக்கிறது
கடுமையானதும் ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமுடியாத
அம்முத்தங்களை என் மென்விரல்களால்
அழுந்தத் துடைக்கிறேன்
மரணத்தின் வாசனை என்னை
மூர்ச்சையாக்கி தூரத்தள்ளி சங்கிலியிடுகிறது
அது வீரியம் கொண்டு
உயிரின் தசைநார்களை கிழித்துபடி
மிகப்பலம் கொண்ட எதிரியைத் தாக்குவது
போல் வாள்வீச்சுடன் காற்றை கிழித்தபடி
அப்பாவின் முன் அதிர்ந்து நிற்கிறது
பின் மண்டியிட்டு
உயிரைக் கொடுத்துவிடு
என்று பிச்சை கேட்கிறது.

7 கருத்துகள்:

M.Rishan Shareef சொன்னது…

அருமையான கவிதை !

chandra சொன்னது…

நன்றி நண்பரே

ராஜா சந்திரசேகர் சொன்னது…

இந்த வலியில் தெரிகிறது என் தந்தையின் முகம்.

chandra சொன்னது…

இதை எழுதும் கணத்தில் உயிரோடு இருந்த என் அப்பா இன்று இல்லை. கடைசியாக மரணம் தன் அன்பின் முத்தங்களை வழங்கிவிட்டது.

Marie Mahendran சொன்னது…

எனக்கும் இந்த கவிதைகளை வாசிக்கும் போது எப்படி என் தந்தையின் மரணத்தை எதிர்கொள்ள போகிறேனோ தேரியலை....பயமாக இருக்கின்றது.

கை.அறிவழகன் சொன்னது…

மரணம் வழங்கிய அன்பு முத்தங்களின் காயம் ஆற்ற முடியாத ரணமாய் இருப்பினும், நாம் அந்த அன்பு முத்தங்களை எப்போதும் எதிர் கொண்டே வாழ்வின் கணங்களைக் கழிக்க வேண்டியிருக்கிறது, தந்தையாரின் நினைவுகளும், அன்பும் உங்களை எப்போதும் உயரே உந்திச் செலுத்தட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.

தோழமையுடன்
கை.அறிவழகன்

chandra சொன்னது…

தோழமைக்கு நன்றி மாரி,மகேந்திரன்