வெள்ளி, 20 நவம்பர், 2009

பால்ய வனம்


ஒளிஇருள் வெள்ளமாய்
நீந்தின
என் பால்யத்தின்
சூட்டில்.
பிறந்த மேனியாய்
பாதாளம் சுருங்கும்
இடிச்சிரிப்பில்
வனாந்தரத்தின் தனிமையை நிறைத்தேன்
கணங்கள் நொடிந்தன
பூக்கள் வெடித்து
மகரந்தம் பரப்பியது
அருவியின் மோனநிலை
குலைந்து
பலதிசைகளிலும்
பீறிட்டுச் சிதறியது
சாம்பல் மேகத்திலிருந்து
புற்கள்
காட்டில் இறங்கி
அற்ப ஒலியில்
கூச்சலிட்டு மயங்கின
ரீங்காரத்தை
மறந்த வண்டுகள்
பூக்களைப் புணர்ந்தன
ஓடையின் பொன் மணலில்
துயில் கொண்டிருந்த
கூழாங்கற்கள் மேலெழும்பிக் குதித்தது
காட்டின் நிறம் மறைந்தது
நான் பால்யத்தின் வெளியில்
யோனி மறந்தவளாயிருந்தேன்

8 கருத்துகள்:

adhiran சொன்னது…

fentastic strike!

chandra சொன்னது…

thanks for your comment adhiran

மாரி செல்வராஜ். சொன்னது…

நல்ல கவிதை அக்கா.என் தொடக்க எழுத்திகளுக்கு உங்கள் அறிவுரையை எதிபார்க்கிறேன். படித்துவிட்டு சொல்லவும்.

chandra சொன்னது…

நன்றி தம்பி. நிச்சயமாக உங்கள் எழுத்தைப் படித்துக் கருத்துச் சொல்வேன்.

adhiran சொன்னது…

chanra,

அன்பு என்பதே ஒரு ஏமாற்று வேலை. அன்பின் கொல்திறன் திசை மற்றும் தூரத்தை வெல்லும் திறன். அனால் பேரன்பு எதிர்பார்ப்பை நிராகரிக்கிறது. ஏசுவுக்கும் புத்தனுக்கும் மகாவீரருக்கும் வாய்த்தததாக நம்பப்படும் அப்பேரன்பு அனைத்தையும் உள்ளடக்கும் ஆழ்கடல். அதன் அடர்த்தி சாதாரண மனிதனால் இயங்க முடியாத ஒரு சூழலை உருவாக்குகிறது.

அன்பின் பெயரால் அதிகாரம் செலுத்தவே முடியும். பாசம், நேசம்,அக்கறை, பிரியம் என பல சொற்களைத்தான் ஒட்டுமொத்தமாய் அன்பென்று நாம் உருவகம் கொள்கிறோம். காதலைக்கூட அன்பு கேலி செய்கிறது. எதிர்பார்ப்பின்மை மற்றும் மற்றமையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை மட்டுமே அன்பின் ஆதார அலகுகள். அதை புரிந்துகொள்பவர்களுக்கு அன்பு ஒரு இனிய வாழ்வின் சாத்தியப்பாடுகளை அளிக்கிறது. என்னை பொறுத்தவரையில் அன்பு செய்வது என்பது வேறு அன்பாகவே இருப்பது வேறு. நாம் சாதாரண வெகுமக்கள். நம்மால் அன்பு செலுத்தவே முடியும் பதிலாக அன்பையோ துரோகத்தையோ பரிசாக பெற்றுக்கொண்டு. !

அன்பாகவே இருப்பது தவம். நம்மை போன்றவர்களுக்கு அது தேவையில்லை என்றே தோன்றுகிறது. நமது சூழல் கடுமையான காழ்ப்புணர்ச்சிகளாலும் எதிர் தாக்குதல்களாலும் ஆனது. இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கேடயமும் அன்பிற்கு எதிரானது. ஆனால் கேடயங்களை எடுப்பதும் குறுங்கத்திகளை பிரயோகிப்பதும் மனிதர்களின் அடிப்படை இயல்பு. சே.பிருந்தாவின் ஒரு வரி "என் நகங்கள் அன்பாலானவை" எப்போதோ படித்தது. மறக்கமுடியாத படிமம். நாம் அன்பை பிரயோகிக்கிறோம் ஒரு ஆயுதமாக! எதிர்தாக்குதல் யுத்த கடமை.

that's all for now. thanks.

ajayan bala baskaran சொன்னது…

இது வரை எழுதியதில் எனக்கு பிடித்த சிறந்த கவிதை

chandra சொன்னது…

ஆதிரன் அன்பு பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு உங்கள் வலைப்பூவில் நான் கருத்துக்களை தெரிவிக்கிறேன்.

chandra சொன்னது…

அஜயன் என்றும் நீ என் எழுத்தை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாய். உன் விமர்சனம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. மிக்க நன்றி நண்பா.