திங்கள், 19 அக்டோபர், 2009

கொலைகள் பெருகும் அன்பு

வெளிச்சத்தில் பெருகும் பூச்சிகளாய்
துரோகம் என்மீது
இடைவெளியற்று அப்புகிறது
விலக விலக
ஆழிநீரைப்போல் உயர்ந்தெழுந்து துரத்தி
முழுமையாக மூழ்கடிக்கிறது
நானே துரோகத்தின் குரலாய் மாறும்போது
கண்கூசும் ஒளியாய்
அன்பை அணுஅணுவாக உதிர்க்கிறது
மிதக்கும் ஒளியை கையில் பிடித்தால்
பின் நிதானமாக
குரல்வளை அறுத்து
நிகழ்த்தப்படுகிறது ஒரு கொலை.

2

எதற்கும் மாற்று இல்லை நான்
எதற்கும் மாற்று இல்லை நீ
இருந்தும் ஒன்றின்
வேறொன்றாய்த்தான் இருக்கிறோம்.

11 கருத்துகள்:

butterfly Surya சொன்னது…

அருமை..

இரண்டாவது மிகவும் பிடித்திருக்கிறது....

chandra சொன்னது…

நன்றி சூர்யா

வசுமித்ர சொன்னது…

நிதானம் என்பது கயமையின் வெளிப்பாடு. தோழி மரணத்திற்கு நிதானம் கிடையாது. வலியென்ற ஒரு சொல்லை உச்சரிக்கையில் உதடுகள் பிரிபடும் ஓசை கேட்கிறது.

கொற்றவை சொன்னது…

i like the second one very much

Unknown சொன்னது…

அருமையான கவிதை சந்திரா...சந்திராவிற்கு உரைநடைதான் சிறப்பாக வரும் எனும் என் கருத்தியலை நான் இன்றுடன் மாற்றியமைத்துக் கொள்கிறேன்..கவித்துவமான வார்த்தைகள்..ஆழ்ந்த பொருள், தேர்ந்தெடுக்கப்படாத வார்த்தைகள்...கவிதை!

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
chandra சொன்னது…

thanks for your comment Who Am I

chandra சொன்னது…

தோழி உமாவுக்கு, கவிஞரான நீங்களே பாராட்டும்போது மிக்க மகிழ்ச்சி.

Marie Mahendran சொன்னது…

எதற்கும் மாற்று இல்லை நான்
எதற்கும் மாற்று இல்லை நீ
இருந்தும் ஒன்றின்
வேறொன்றாய்த்தான் இருக்கிறோம்.