செவ்வாய், 26 ஜனவரி, 2010

நினைவில் நீ, நான் மற்றும் சாலை.


மழையில் உன் சாலை ஒரு பறவையைப்போல மிதந்து கொண்டிருக்கும் நேரத்தில் என் தூக்கத்தில் நீ சிரித்துக்கொண்டிருந்தாய். நிழல்படிந்த உன் சாலை மிக அழகானது நீயோ நானோ அல்லது ஒரு குழந்தையோ நடந்து செல்லும்போது. பூக்கள் உதிர்ந்து கிடக்கும் சாலையை அவமதிக்காதே பூக்களுக்கு நிகரான உன் சிரிப்பை உதிர்த்து சாலையை மேலும் அழகாக்கிச் செல். சாலையின் முடிவில் மழையில் நனைந்தபடி மறைந்து செல்லும் உருவத்தை நானாய் நீ கற்பனை செய்வதை நிறுத்தாதே என் நினைவில் உன் சாலை உயிர்பெறட்டும். நீ நடந்து செல்லும் சாலை பூக்கள் மலர்ந்த காடு...இன்னும் இன்னும் என் அன்பின் வார்த்தைகளில் உன் சாலை உயிருள்ள ஓவியம்.

6 கருத்துகள்:

மாற்றுப்பிரதி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
chandra சொன்னது…

Riyas Qurana
அருமை. சந்திரா கவிதையைக் கடந்துவிடும் முயற்ச்சி இந்தப்பிரதியில் உங்களாலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். தமிழில் கதை சொல்லிகள் இருக்கிறார்கள். கவிதை எழுதிகள் இருக்கிறார்கள். கவிதை சொல்லிகள் இல்லை. இது கவிதையும்,கதையுமாக உருமாறும் ஒரு உத்தி. நான் அதிகம் இதைப் பயன்படுத்தியிருப்பேன்

chandra சொன்னது…

நன்றி றியாஸ். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் உங்கள் மாற்றுப்பிரதி எனக்குள் இப்படி எழுத தூண்டியிருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.உங்களுக்கும் கவிஞர் மஜீத் அவர்களுக்கும் நன்றி

chandra சொன்னது…

Amudha Thamizh (f.b ல் கூறிய கருத்து)
வார்த்தைகளால் வருடத் தெரிந்த என் தோழமைக்கு..
உங்கள் எல்லாக் கவீதைகளும் என் அதீதமான நேசிப்புக்கு
உள்ளாகி இருந்தாலும்..
இது இன்னும் அதிகமான
அதீதத்தின் ருசியைத் தந்தது..... See More
........................................................
structurally it reminds me of the
prose-poetry style of TAGORE
and BHAARATHI in KAATCHI..
.................................................
அந்த சாலையில் ஒரு தடைகள் அற்ற
நடை பயின்றதாகவே தோணுது எனக்கு..
..............................................
ஏதோ ஒரூ இனம் புரியாத
அழகு இருந்தது அந்தப் பாதையில்..
அந்த் தொலை தூர உங்கள் உருவத்தில்..
அந்த குட்டி பாப்பாவில்..
அந்த மழையில்..
அந்த மழை நனைவில்..
அந்த சாலை பூக்களில்
அந்த மலர்ந்த காட்டில்..
அந்த நிழலில்..
என்று எது எடுத்தாலும்
அதில் ஆனந்தமே மிஞ்சியது எனக்கு..
..........................................
my most favourite
in the world is a cup of chaai
with my KAFKA..
உங்கள் மனதிலிருந்தும்
உங்கள் விரல்களிலிருந்தும்
வழிந்த இந்த வார்த்தைகளும்
அப்படியே தோணீயது எனக்கு..
.....................................
என் அழகான நாட்களை
மேலும் அழகாக்கிய..
என் சூரியனின் கதிராய்
என் ஜன்னலுக்குள்
நுழைந்த என் நட்புக்கு
என் அன்பு..!!
.................................
i have felt this
binding with nature and love
while reading FROST
WORDSWORTH and WHITTMANN..
மீண்டும் அவர்களுடனான
வாழ்வுடன்...என்னை சந்தித்ததில் மகிழ்ச்சி..
..............................................
இது மென்சோகக்காரி
soniya agarwal
போலல்லாது
நம் shobha போல் இருந்தது..
he..he..he..
smile while reading me chandhru..!!

chandra சொன்னது…

தோழி அமுதாவுக்கு,
உங்கள் பாராட்டின், அன்பின் நெகிழ்ச்சிக்கு தகுதியான எந்த வார்த்தையும் இல்லை தோழி எனக்கு. ஒரு எழுத்தை இத்தன்னை பார்வையோடு பார்க்க முடியுமோ. எழுதுவதை விட அதில் ரசித்து ஆழ்ந்து போவது மிகப்பெரிய கொடுப்பினை மிகப்பெரிய அறிவு. அது உங்களுக்கு வாய்த்திருப்பது மகிழ்ச்சி தோழி. இந்த எழுத்தை இன்னொரு பார்வையில் கவிதை வடிவத்தில் உள்வாங்கியிருக்கிறீர்கள். ஒரு பிரதியை வாசிப்பவன் இன்னொரு பிரதியாக்க முடியும் என்பதை

''ஏதோ ஒரூ இனம் புரியாத
அழகு இருந்தது அந்தப் பாதையில்..
அந்த் தொலை தூர உங்கள் உருவத்தில்..... See More
அந்த குட்டி பாப்பாவில்..
அந்த மழையில்..
அந்த மழை நனைவில்..
அந்த சாலை பூக்களில்
அந்த மலர்ந்த காட்டில்..
அந்த நிழலில்..
என்று எது எடுத்தாலும்
அதில் ஆனந்தமே மிஞ்சியது எனக்கு.. "

இந்த உங்கள் எழுத்தில் உணர்த்தியிருக்கிறீர்கள்.
உலகின் மிகப்பெரிய ஆளுமைகளைப் போல உங்கள் அன்பான மனதில் நானும் என் எழுத்தும் இருப்பதை மிக உயர்வாக நினைக்கிறேன்.

அண்ணாமலையான் சொன்னது…

அருமையாக எழுதுகிறீர்கள்...