வியாழன், 8 ஜூலை, 2010

அதிகாரத்தின் மூத்திரநாத்தம்


நகரம் திறந்தவெளிச் சிறை
ஒரு அகதியைப் போல் என் அறையில் சுருண்டு கிடக்கிறேன்
மஞ்சள் சூரியனும் வெள்ளை மழையும் எனக்கு ஒன்றே
இருட்டிய வானமும் ஒளிர்ந்த வெளிச்சமும் ஒன்றே
அறையின் வெப்பமும் குளிர்ந்த காற்றும் ஒன்றே
அன்பின் மகிழ்வும் துன்பத்தின் வாதையும் ஒன்றே
அமிழ்ந்த இசையாய் என் அறைக்குள் ஒடுங்கவே விரும்புகிறேன்
தமிழ் இலக்கியம் சினிமா பத்திரிக்கை
இசை தொலைக்காட்சி பஸ் நிறுத்தம்
மருத்துவமனை காவல்நிலையம்
தியேட்டர் பள்ளிக்கூடம் கேளிக்கை விடுதிகள் ரயில்நிலையம்
பன்னீர் மரத்தின் நிழலைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை
நகரமெங்கும் அதிகாரத்தின் மூத்திரநாத்தம்
மூச்சு திணறடிக்கும் ஓங்கிய குரல்கள்
துதியற்ற என் இருப்பை அவர்கள் விரும்பவில்லை
காற்றில் நீலம் பாரித்த விஷத்தை அனுப்பினார்கள்
அவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அநீதி
காற்றைப்போல் ஊர்ந்து கதவிடுக்கின் வழியாக
என் பூட்டிய அறைக்குள் நுழைகிறது
துக்கங்களை மட்டுமே நேசித்து பழக்கப்படுத்தப்பட்ட
என் கறுத்து சிறுத்த இதயம் காரி உமிழ்ந்த எச்சில்
காற்றின் நீலத்தை அழித்தது
என் பரிகசிப்பில் மரித்துக்கிடக்கும்
உங்கள் ஆணவத்தின் சங்கிலியை
முழந்தாளிட்டு பொறுக்கிச் செல்லுங்கள்..

11 கருத்துகள்:

adhiran சொன்னது…

ஒருமுனைக் கயிறு முளையில் மறுமுனைக்கயிறு கழுத்தில் கயிறிருப்பதோ அரவச்சாயல் விசமேன்னவோ நம் நாக்கில். காணக்கிடைப்பது கயிற்றரவம். மேயக்கிடைப்பது கோரைப்பதுங்கும் மஞ்சள் வெயில். கழுத்தில் நிற்கும் விஷம். விழுங்கக்கிடைக்கும் அமுதம். கழுத்துக்கும் வயிறுக்கும் ஒன்னரை அடி. அக்கரையில் இருப்பது மரணமோ இல்லை மௌனமோ.

பெண்ணே. அன்பின் மகிழ்வும் துன்பத்தின் வாதையும் ஒன்றே!!!

chandra சொன்னது…

i don't have words adhiran.u r rite and good.

நேசமித்ரன் சொன்னது…

இறுதி இரண்டு வரிகளில் தொனிக்கும் குரலின் அடர்த்தி ...

--------------

அழுத்தமான காயத்தின் தழும்பு மேடிட்டு
உறுத்துகிறது நினைவு மீளும் போதெல்லாம்

பெயரில்லா சொன்னது…

ஊழித்தீயின் வலிமை
ஒடுக்கப்பட்டோரின் ஒருதுளி எச்சிலுக்கு.
அதிகார நஞ்சை
துப்பியழிக்கும் துணிவு
அதற்குமட்டுமே உண்டு.

chandra சொன்னது…

@நேசமித்திரன், பகிர்ந்தலுக்கு நன்றி தோழர்.
@இளங்கோவன் 'ஊழித்தீயின் வலிமை
ஒடுக்கப்பட்டோரின் ஒருதுளி எச்சிலுக்கு'ஆம் தோழர் உண்மை அதுவே.

chandra சொன்னது…

@நேசமித்திரன், பகிர்ந்தலுக்கு நன்றி தோழர்.
@இளங்கோவன் 'ஊழித்தீயின் வலிமை
ஒடுக்கப்பட்டோரின் ஒருதுளி எச்சிலுக்கு'ஆம் தோழர் உண்மை அதுவே.

Unknown சொன்னது…

என் கறுத்து சிறுத்த இதயம் காரி உமிழ்ந்த எச்சில்
காற்றின் நீலத்தை அழித்தது
என் பரிகசிப்பில் மரித்துக்கிடக்கும்
உங்கள் ஆணவத்தின் சங்கிலியை
முழந்தாளிட்டு பொறுக்கிச் செல்லுங்கள்..//

இப்படியாக முடிக்கும்போது, தொண்டை ஒருமாதிரியாக செருமுகிறது..

அன்பின் மகிழ்வும் துன்பத்தின் வாதையும் ஒன்றே :)

chandra சொன்னது…

@ஆறுமுகம் முருகேசன்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்.

Unknown சொன்னது…

'நகரமெங்கும் அதிகாரத்தின் மூத்திரநாத்தம்
மூச்சு திணறடிக்கும் ஓங்கிய குரல்கள்'

True lines, this is what happening all over world.

Fred.

இடைவெளிகள் சொன்னது…

காயங்களின் சுவடுகள் கவிதை வரிகளில் ரசனையாய் வந்து விழுந்திருக்கிறது.
உணர்வுகளோடு உரசிய அனுபவம்
படித்தபோது தொடர்கிறது என்னுடன். பாராட்டுக்கள்.

இடைவெளிகள் சொன்னது…

காயங்களின் சுவடுகள் கவிதை வரிகளில் ரசனையாய் வந்து விழுந்திருக்கிறது.
உணர்வுகளோடு உரசிய அனுபவம்
படித்தபோது தொடர்கிறது என்னுடன். பாராட்டுக்கள்.