வியாழன், 28 மார்ச், 2013

ஆயிரம் தலை கொய்த புத்தன்

உலகத்தின் கண்கள் மூடிக்கண்ட காலத்தில்
புத்தனின் குவளை குருதியால் நிரம்பியது
ஆயிரம் குழந்தைகளின் தலைகள் 
காலடியில் விழ்ந்த பின்னும் 
பதற்றத்துடனே இருக்கிறான் 
முள்வேலியிட்டு பத்திரப்படுத்துகிறான் 
மிச்சமிருக்கும் வன்மத்தை.
காகங்கள் கொத்திக்கொண்டுபோன
ஜனத்திரளின்உயிர் வெளியெங்கும்
சிறுஅலையாகி எம்பியதும்
கொடுவாள்களை துப்பாக்கிகளை பீரங்கிகளை
பதுக்குகிறான் உயிர்மாய்ந்த பதுங்குக் குழிகளில்.
அண்டைவீட்டுக்காரனெல்லாம்
நாக்குகளை நீட்டி
புத்தனின் மேல் படிந்த ரத்தக்கறைகளை
துடைத்தகற்றத் துடிக்கிறான்
அவை குழந்தைகளின் இளம்ரத்தம்
அண்டமெல்லாம் நிரம்பிய
நீராலே கழுவமுடியாக் கண்ணீர்
உயிர்த்தெழும்பும் கடல் அலை.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...