வெள்ளி, 22 ஜனவரி, 2010

காதலை பிரியாதீர்கள்




மழையடிக்கும் பொழுதுகள்
காதலைச் சொல்லும் தூதகணங்கள்
அன்பர்களே
உங்கள் காதல் முறிவினை அப்பொழுதில் நிகழ்த்தாதீர்.
காதல் பொழிவில் தேகம் அழகுறும் வசந்தகாலத்தில்
எனவே சிறப்பானவர்களே
விடைசொல்லி நீண்ட மௌனத்தோடு பிரிவதற்கு
ஏதுவானது இல்லை அக்காலம்.
தனிமையின் துயர் நெக்குருக வாட்டும் பனிக்காலத்தில்
நண்பர்களே அதுவும் சிறப்பானதல்ல.
வெம்மை தகிக்கும் கோடை
உங்கள் அன்பானவர்களின்
தற்கொலையைத் தூண்டும்
நீங்காதீர் அவர்களை குறிப்பாக கோடையில்.
இலை உதிரும் நாட்களின் உலர்ந்த காற்றுகள்
திரெகத்தை வலிமை இழக்கச் செய்யும்
நோய்தாக்கும்.
பருவமற்ற சாதாரண தினங்கள்
பிரிந்த காதலை நினைத்து நினைத்து
பித்துக்கொள்ளச் செய்யும்.
எந்தப் பருவமும் உகந்தல்ல
காதலை விட்டுச் செல்வதற்கு
எனவே
எக்காலத்திலும் காதலியுங்கள் காதலைப் பிரியாமல்

19 கருத்துகள்:

அஹம் பிரம்மாஸ்மி சொன்னது…

அட..அட.. காதலை சொல்வதற்க்கு எக்காலமும் பொருந்தும்..
காதலை பிரிவதற்க்கு எக்காலமும் பொருந்தாது..

தமிழினிமை... சொன்னது…

ha..ha..ha..
chandhru...
well done..
ok..getting back to somewhere...??
But..not to the old trackz..right..???

chandra சொன்னது…

அமுதாவுக்கு,
ஆமாம் dear எல்லாம் உங்களுக்காகத்தான்.

chandra சொன்னது…

தம்பி ரன்ஜித்,
"அட..அட.. காதலை சொல்வதற்க்கு எக்காலமும் பொருந்தும்..
காதலை பிரிவதற்க்கு எக்காலமும் பொருந்தாது.." உன்னை நம்பவே முடியாதுப்பா திட்டுறியா? பாராட்டுறியா?புரியல..

adhiran சொன்னது…

welcome back.

//ok..getting back to somewhere...??
But..not to the old trackz..right..???//- taminathi.

????????????? :-)

how is work chanra?

adhiran சொன்னது…

sorry itz not thamilnathi - its tamilini.

chandra சொன்னது…

வணக்கம் ஆதிரன்.work is going well. ஆனால் நீங்கள் பூடகமாகவே கமெண்ட் போடுங்க.

chandra சொன்னது…

ஆதிரன் ரொம்ப குழம்பாதீங்க ஏன் இவ்வளவு கேள்விக்குறி.தமிழினி என்னை சோகமா கவிதை எழுத வேணாம்னு சொல்லியிருந்தாங்க. அதுக்குத்தான் அப்படி கமெண்ட் போட்டிருக்காங்க.

பெயரில்லா சொன்னது…

காலங்கள் காதலை புணிதப்படுத்துகிறதே...
காதலை காட்டிலும் காலங்களை ரசிக்கும் உங்கள் கவிதை அழகு...

சரவணன் ராம் உதவியாளர்...

chandra சொன்னது…

நன்றி சரவணன் எப்படி இருக்கீறீர்கள்? உங்கள் வலைப்பதிவை பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது.இன்னும் நிறைய எழுதுங்கள். உலகில் மிகப்பெரிய அபத்தம் காதலை புனிதம் என்று சொல்வதுதான். காதல் என்பது ஒருவர் இன்னொருவரிடம் தனித்துவமான(personal)அன்பை செலுத்துவது அல்லது பெறுவது. அந்த அன்பு புனிதமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.அந்த புனிதம்தான் சந்தேகம்,வன்முறை போன்ற எல்லா கேவலங்களையும் கொண்டு சேர்க்கிறது. அன்பு என்பது உண்மையாக இருப்பது. "காலங்கள் காதலை புனிதப்படுத்துகிறதே..." என்று சொல்லியிருக்கிறீர்களே அது எப்படி?

adhiran சொன்னது…

qustion marks may withdrawn chanra.!

I think the reply you told to saravanan and this particular poem are entierly travelled opposite direction.

one is 'kathal punithamillai' and other is 'kathalai piriyaatheerkal'

am I right?

பெயரில்லா சொன்னது…

உலகில் மிகப்பெரிய அபத்தம் காதலை புனிதம் என்று சொல்வதுதான்

hoooooooo cool !
enovo nadakuthu marmamai irukuthu !
onnume puriyala olagathula !

காதல் என்பது ஒருவர் இன்னொருவரிடம் தனித்துவமான(personal)அன்பை செலுத்துவது அல்லது பெறுவது.

ur obsolutely right !

பெயரில்லா சொன்னது…

காதல் என்பது ஒருவர் இன்னொருவரிடம் தனித்துவமான(personal)அன்பை செலுத்துவது அல்லது பெறுவது.

ur obsolutely right !

chandra சொன்னது…

ஆதிரன்,
காதலை புனிதம் என்று சொல்வது அபத்தம் இது என் கருத்து.இதில் மாறுபாடு இல்லை. காதலைப் பற்றி எனக்கு பல கருத்துக்கள்,உணர்வுகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் 'காதலைப் பிரியாதீர்கள்' கவிதை.

jose vasanth சொன்னது…

"எந்தப் பருவமும் உகந்தல்ல
காதலை விட்டுச் செல்வதற்கு"

ilannndhu thavippaavarklin thuyarai azakai pathivu seiythurukreerkal...

katrin veliyengum ungal kavithai sirakukal viryum...

vaalthukkal.

chandra சொன்னது…

மிக்க நன்றி ஜோஸ் வசந்த்.

Ultra graphics சொன்னது…

Nice

அண்ணாமலையான் சொன்னது…

மிக அழகான கவிதை.. பாராட்டுக்கள்...

chandra சொன்னது…

நன்றி ultra graphics,அண்ணாமலையான்.