புதன், 9 மார்ச், 2011

வெற்று வெளி



இளம் மஞ்சள் மாலையில்
பறவையைப்போல் திக்கற்று பறக்கலாம்
மாலை கருகும் நேரத்தில்
அடையாளமற்ற கூட்டில்
முழுஇருளின் கறுமையில் கரையலாம்
...இருண்மையின் தனிமை அன்றைய
பித்துநிலையை சமன்செய்யும்
விடியும்
மீண்டும் பித்துக்கொள்ளலாம்
மீண்டும் சமனடையலாம்
பித்து சமன்
வாழ்வின் இருபோக்கு
இதுதவிர்த்து சுவாரஸ்யமற்றே இருக்கிறது
வெற்று வெளி.

(ஸ்ரீநேசனின் ’ஒரு மலையின் மாலை’ பாதிப்பிலிருந்து உருவான கவிதை.)

2 கருத்துகள்:

சாய் ராம் சொன்னது…

நன்றாக இருக்கிறது. காற்றில் அலையும் சிறகும் கூட்டில் அடையும் பறவையும் ஒன்றே! ஒன்றா?

chandra சொன்னது…

ஆமாம் நண்பா