சனி, 10 ஏப்ரல், 2010

மௌனத்தின் சொல்உன்னைச் சிறப்பாக அழைப்பதற்கு
சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
அன்பைவிட பெரியசொல்
இதுவரை பூமியில் உச்சரிக்கப்படாத
ஆதிச்சொல்
உன்மத்தம் பிடித்தலையச் செய்யும் அழகியசொல்
தேடிக்கலைகிறேன்
எங்கும் இல்லை அந்த பொன் பொறித்த சொல்
கடைசியில் கண்டடைந்தேன்
மௌனத்தில் விரியும் என் புன்னகையே
உனக்கான தேவச்சொல் என்பதை

2
முடிவில்லா புன்னகை

அவன் உதடுகளில்
மௌனம் அழகானது
முத்தங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை
புன்னகை முடிவில்லாக் கவிதை
உதிரும் சொற்கள் பேரண்டம் ஆளுபவை
ஆகா! அவனது உதடுகள்
பனித்துளி மிதக்கும் காடு
மழைகுடித்த காட்டுப்பூக்கள்
ஆம் அவன் உதடுகள் எழில்வாய்ந்தவை
நானே அவைகளின் பேரரசி

3
தொடர்பற்ற நதி

பரந்துகிடக்கும் வெளி
அடைக்கும் மௌனம்
சிதைந்த ஒலி
வெளிறிய வெளிச்சம்
நட்பறுந்த பொழுதுகள்
காதலின் மரணம்
குழந்தையின் வீறிடல்
அம்மாவின் கண்ணீர்
இவை தொடர்பற்று தொடர்புகொண்டிருக்கிறது
ஓடிக்கொண்டிருக்கும் நதியைப்போல

(ஏபரல் 2010 அம்ருதா இலக்கிய இதழில் வெளிவந்த எனது கவிதைகள்.)

12 கருத்துகள்:

ஜீவன்(தமிழ் அமுதன் ) சொன்னது…

good one..!

Sai Ram சொன்னது…

கவிதையின் வரிகளில் தன்னம்பிக்கை மிகுந்திருக்கிறது. வாழ்த்துகள்!

chandra சொன்னது…

thanks jevan.

சாய்க்கு,
"கவிதையின் வரிகளில் தன்னம்பிக்கை மிகுந்திருக்கிறது. வாழ்த்துகள்!" உன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.

soorya சொன்னது…

தோழிக்கு,
இப்போதான் தங்கள் கவிதை படிக்க நேர்ந்தது.
மனசுக்கு இதமான கவிதைகள்.
படிக்கும் போது..அருவெறுப்பைத் தரும் கவிதகள் போல இவை இல்லை.
நன்றாகவே வந்திருக்கின்றன.
நன்றி.

chandra சொன்னது…

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சூர்யா அவர்களே.

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

kousalya சொன்னது…

very nice. i like to see your old posts also.

chandra சொன்னது…

thanks kousalya.

Fredrick சொன்னது…

//உன்மத்தம் பிடித்தலையச் செய்யும் அழகியசொல்
தேடிக்கலைகிறேன்
எங்கும் இல்லை அந்த பொன் பொறித்த சொல்
கடைசியில் கண்டடைந்தேன்
மௌனத்தில் விரியும் என் புன்னகையே
உனக்கான தேவச்சொல் என்பதை//

Good...Nice lines.
I could feel that.
Fred.

josevasanth சொன்னது…

"மௌனத்தின் மொழிகள்"

நிறைவான கவிதை.

thalaivan சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com